நிலத்தடி நீர் காப்போம்


நீர் முகாமைத்துவம் தொடர்பாக 11.09.2019 அன்று வாழ்வகத்தில் நடைபெற்ற நினைவுப் பேருரையின் போது வடமாகாண நீர்பாசன பொறியியலாளர் எந்திரி. சர்வானந்தன் சர்வராஜா ஆற்றிய உரை அனைத்து மக்களின் பயன்கருதி இணையத்தில் பிரசுரிக்கிறேன்.
 


நீர் பற்றிய அறிமுகம்
நீரின்றி அமையாது இவ்வுலகு (When Water Fails, Function of Nature Cease) நீர் என்ற ஒன்று பொய்த்துப் போகுமானால்) இந்த இயற்கையின் அத்தனை அசைவுகளும் நின்றுவிடும், உறைந்துவிடும் என்பதை 3000 ஆண்டுகளுக்கு முன்னே எங்கள் ஐயன் வள்ளுவன் எடுத்தியம்பி விட்டு சென்றிருக்கிறான். நீர் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதையும் அது பற்றிய விழிப்புணர்வு எம்மிடம் என்றும் இருக்கவேண்டுமென்று என்றோ எமக்கெல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் முதல் காரணி நீர்
யே மூன்றாம் உலகப்போர் மூளுமாகயிருந்தால் அதற்கான முக்கியமான முதன்மைக் காரணம் நீராகத்தான் இருக்குமென்று இன்றைய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் உலக அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றார்கள். மழை பெய்யும் தானே எமக்கு நீர் கிடைக்கும்தானே என்று எதிர்பார்த்து காத்திருந்தால் வல்லரசுகள் உங்கள் மழை மேகங்களை எல்லாம் கைப்பற்றிச் சென்றுவிடும்.
நீர் என்பது இன்றைய உலகின் பேசுபொருளாக மாற்றம் அடைந்திருக்கிறது. பல அவைகளில் விவாதப்பொருளாக எழுந்து. நிற்கிறது. பல இடங்களில் சர்ச்சைப் பொருளாக சூழ்ந்திருக்கிறது. ஏன் நாளை இந்த உலகின் சண்டைக்குரிய பொருளாகக் கூட வடிவம் எடுக்கும்
இன்றைய காலத்திலேயே குடிப்பதற்கு சற்றும் உகந்ததல்லாத நீரைப் பருகும் பல சமூகங்கள் உண்டு. இந்தநிலை நாளை நமக்கும் வரலாம் என்பதே எம்முன்னே எழுந்து நிற்கும் மிகப்பெரிய அச்சம். நீருக்கான யுத்தம் நீண்டதூரத்தில் இல்லை
"தங்கம் கொடுத்து தண்ணீர் வாங்குவாய்"
- நாளை தண்ணீரின் பெறுமதி தங்கத்தைவிட வலுப் பெறுமென்று ஆருடங்களும் ஆராய்ச்சிகளும் அங்கங்கே எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. 2001ம் ஆண்டு கொழும்பு சென்றபோது அங்கே தண்ணீர்ப் போத்தலையும் அதில் விலை பொறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்து மிகவும் வியப்படைந்தேன். தண்ணீருக்கு காசா என்று ஆனால் இன்று எல்லா வீடுகளும் தண்ணீரப் போத்தல்கள் படையெடுத்து முகாம் அமைத்து நிற்கின்றது.
இந்தப் பூமி 67% இற்கு மேலாக நீரினால் சூழப்பட்டிருக்கிறது, இருந்தபோதிலும்2.7% இற்கு குறைவாகவே நன்னீர்காணப்படுகின்றது. அதிலும் 2.05% இற்கு மேலான நீர் பனிக்கட்டியாகவும் பனிப் பாறைகளுக்குள் உறைந்தும் காணப்படுகின்றது. மனிதன் பெறக் கூடியதாக அடையக்கூடியதாக இருக்கின்ற நன்னீர் 0.7% இற்கும் குறைவாகவே இருக்கின்றது என்பதே கசப்பான உண்மை . நீர் இருக்கிறது ஆனால் தேவைக்கேற்ற வகையில் இல்லை என்பதே யதார்த்தம்.
நீருக்காகவே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வரும்
அத நாம் நிவாரணத்திற்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வரலாறு, பாணுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வரலாறு இப்படி பல விடயங்களுக்கு காத்திருந்த வாழ்வியலை கடந்து வந்திருக்கிறோம். ஏன் இன்றும் இந்த உலகில் புதிதாக 1 phone /Samsung phone வெளிவரும் போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது ஆனால் நாளை நீருக்காக இந்த உலகமே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
உலகளாவிய ரீதியில் உற்றுநோக்குமித்தில், நீரானது பெருகி வருகின்ற மிகப் பற்றாக்குறையான ஒரு வளமாகும். அதிகரித்து வரும் சனத்தொகை, காலநிலை மற்றும் உணவுநுகர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம் இதில் கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றது. மதிப்பிடப்பட்ட தற்போதுள்ள தரவுகளிலிருந்து பார்க்கும்போது சில நாடுகள் வரும் 20 ஆண்டுகளில் நீர் தொடர்பில் கடுமையான பற்றாக்குறையை அனுபவிக்கும். அதிலும் சீனா, இந்தியா, தென் ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருக்கும்.
ஆளில்லாத வீட்டுக்குள் அரைக்குவளை நீர் திருடினான் என்பதற்காக ஆயுள்தண்டனை கூட விதிக்கப்படும் சட்டங்கள் உருவாக்கப்படலாம்.
-: 16:
உலகளாவிய ரீதியில் 70%மான நீர் விவசாயத் தேவைக்கும் 22%மான நீர் தொழிற்துறைப் பயன்பாட்டுக்கும் 8%மான நீர் வீட்டுத்தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் வளர்ச்சி
'-: 17 :
மழை காலங்களில் ஓடுகின்ற ஆறுகளாகவே காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் றுகள் இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும்.
அடைந்த நாடுகளில் 30%மானநீர் விவசாயத் தேவைக்கும்59%மான நீர் தொழிற்துறைப் பயன்பாட்டுக்கும் 11%மான நீர் வீட்டுத்தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எங்களைப் போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் 82%மான நீர் விவசாயத்தேவைக்கும் 10%மான நீர் தொழிற்துறைப் பயன்பாட்டுக்கும் 8%மான நீர் வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
நீரின் பரவலாக்கம் என்பது சனத்தொகைக்கு ஏற்றது போல் இல்லாமல் சீரற்ற நிலையில் காணப்படுகிறது. உதாரணமாக ஆசியாவில் உலக சனத்தொகையில் 60% இற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நீர் 36% இற்கும் குறைவாகவே காணப்படுகிறது. தென்அமெரிக்காவில் உலக சனத்தொகையில் 6% இற்கும் குறைவான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நீர் 26%இற்கும் அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வாறு இடத்துக்கு இடம் பிரதேசத்திற்குப் பிரதேசம் நீரின் பரம்பல் சீரற்று காணப்படுகின்றது. அத்தோடு1 2%மான மக்கள் 85%மான நீரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மீதி 88%மான மக்கள் 15%மான நீரையே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இதுவே நீர் தொடர்பான யுத்தத்திற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இல்லை. ஆனால் வழுக்கை ஆறு என்ற ஒன்று உண்டு. இது ஓர் ஆறு இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள வழுக்கை ஆறு தொடர்பாக செங்கை ஆழியான் தனது நூலில் யாழ்மாதா தன்னை யாரும் மலடி என்று சொல்லக்கூடாது என்பதற்காக சத்திரசிகிச்சை செய்து பெற்றுக்கொண்ட பிள்ளை வழுக்கை ஆறுஎன்றார். நீறில்லா நெற்றி பாழ் நெய் இல்லா உண்டி பாழ் ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்என்று ஒளவையார் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தினை அழகுபடுத்த யாழ்ப்பாணத்தில் ஓர் ஆறினை உருவாக்குவதற்காக நீண்டகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்திற்கான ஆறு ஆறுமுகம் திட்டம் என்று அழைக்கப்படும் திட்டம் யாவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணத்தின் நீர்வளங்கள்
இலங்கையில் 9 மாகாணங்கள் உண்டு. இதில் வட மாகாணத்தில் ஏறக்குறைய ஒரு மில்லியன் சனத்தொகை காணப்படுகிறது. வட மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. வட மாகாணத்தில் உள்ள மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகை யாழ்ப்பாணத்தில் உள்ளது. ஆனால் நிலப்பரப்பை ஒப்பீடு செய்தால் ஏனைய மாவட்டங்களை விட குறைவாகவே உள்ளது.
ஆனையிறவு கடல்நீரேரியில் 04 ஆறுகள் கலக்கிறது. அதனை முள்ளியான வாய்க்கால் ஊடாக வடமராட்சி நீரேரி மற்றும் உப்பாறு நீரேரிகளுக்கு நீரை கொண்டு வருவதே இத்திட்டமாகும்.
யாழ்ப்பாணத்தின் சிறப்பை உருத்திரமூர்த்தி பின்வருமாறு கூறுகின்றார், "ஆறு பிறந்து தவழ்ந்து வயல்கள் அடைந்து கதிர்கள் விளைந்திட வானேறி உயர்ந்த மலை இல்லை என்று கதைகள் கூறுவதுண்டு. வானேறி உயர்ந்த மலை இல்லையாயினும் என்ன இருந்தன தோள்கள் என்று கூறி உழைத்து பின் ஆறி கலைகளில் ஊறி சிறந்ததுயாழ்ப்பாணம்"
இலங்கையில் 103 ஆறுகள் காணப்படுகிறன. வட * மாகாணத்தில் 23 ஆறுகள் காணப்படுகிறன. வட மாகாணத்தில் உள்ள ஆறுகள் Seasonal River ஆகவே காணப்படுகிறது. அதாவது
-: 18 :
- 19 :
நீர்வட்டமும் குடாநாட்டின் தரைகீழ் நீரின் அமைப்பும்
OT ELIT:
நிலத்தடி நீர்வளம் - (Ground Water)
ஆறுகள் இல்லை என்பதனால் மிகப்பெரிய குளங்கள் அமைத்து பரிபாலிக்கும் நிலை எமக்கு இல்லை. கடவுள் ஒரு வாசல் மூடினாலும் மறுவாசல் திறந்து வைப்பான்என்பதற்கிணங்க எமக்கு " நிலத்திற்கடியில் நீரை தேக்கும் நீர்த்தேக்கத்தைதந்திருக்கிறான்.
3
-
11
பாடல் : மா: Frt5 மாரர்
well at putture
[பா
தான்
நான் . Kenya
சக்க
:
தினம் டிசம்
1. I ME:
4 :31
கர் . பார் : பாகம் 4
1 பாக ... கது - 8: "
1
12
2
:
பார் :
",
1 11 ம்
இன்னொரு வகையில் கூறுவதாயின்,இன்றைக்குத்தான் நீர் என்பது புதையல், பொக்கிசம் என கூறுகிறார்கள். ஏற்கனவே இதனை நாம் அறிந்திருந்த படியால் தான் நிலத்தடியில் நீரை புதைத்து வைத்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் 4 நிலத்தடி நீர்த்தேக்கங்கள் (Aquifers) உள்ளன
வலிகாமம் - ValikamamAquifer வடமராட்சி - Vadamaradchhi Aquifer OGLODITLA - Thenmaradchi Aquifer ஊர்காவற்றுறை - KaytsAquifer
மேற்பரப்பு நீர்வளம் (surface water)
பெரிய குளங்கள் இல்லாவிட்டாலும் மேற்பரப்பில் நீர் தேக்கி வைத்திருக்கும் அமைப்புகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்று நீரேரிகள் காணப்படுகிறது. அவையாவன: 1. உப்பாறு நீரேரி - Upparu Lagoon 2. வடமராட்சி நீரேரி - Vadamaradchi Lagoon 3. ஆனையிறவு நீரேரி - Elephant Pass Lagoon
Valkama
பா .
உப்பாறு நீரேரி ஆனது நாவற்குழிப் பாலத்திற்கு அருகில் தடுப்பணை (Barrage) அமைத்து கடல்நீரை 'உள்வராது தடுத்து நன்னீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்றே தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய மேற்கு புறத்தில் பராஜ் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆனையிறவில் 1960 களில் முயற்சி எடுத்த போதும் தற்போது எவ்வித செயற்பாடும் இன்றி காணப்படுகிறது.
1
5:13;பிம்
24
சுண்ணாம்பு கற்பாறைகளுக்கு இடையில் உள்ள இடை வெளிகள் வெடிப்புகள் என்பவற்றில் நீர் தேங்கி காணப்படுகிறது. மழைகாலத்தில் மழைநீர் நிலத்திற்கு ஊடாக சென்று இங்கே தேக்கப்படுகிறது.
19 -:20 :
அதனை விட 1000க்கும் மேற்பட்ட சிறுகுளங்கள் காணப் படுகிறன. வழுக்கையாறு எனும் வெள்ள வாய்க்கால் தீவகங்கள் மற்றும் கரையோரங்களை அடிப்படையாகக் கொண்டு உவர்நீர் உள்வருவதை தடுத்து நன்னீரை வைத்திருக்கும் 34 உவர்நீர் தடுப்பணை அமைப்புக்கள் காணப்படுகிறன.
-: 21:
இவை நன்னீரை மேற்பரப்பில் வைத்திருக்கும் அமைப்புக்கள் ஆகும். அதன் மூலம் நீர் மீள்நிரப்புகை மற்றும் நிலத்தடி நீர் மேம்படுத்தல் என்பன நடைபெறுகிறது.
..
இதைவிட எமது மேற்பரப்பு நீர்வளமாகிய நீரேரிகள் குளங்கள் உவர்நீர்த்தடுப்பணையிலும் மிகக் கணிசமான நீர் (150 MCM இற்குமேல்) சேமிக்கப்படுகிறது. ஆனால் அவையில் பெரும்பகுதி ஆவியாதல் மூலம் இழக்கப்படுகிறது. அத்தோடு மழைகாலங்களில் இந்த நீர்நிலைகளுக்கூடாக கணிசமான அளவு நீர் கடலைச் சென்றடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Valukkai Aru Drainage Scheme
Vadamaradchi Lagoon
இctitiTit:
"சச்சிsalt Pres ,காNE
34 Nos. Of Salt Water Exclusion Schemes
எம்முன்னோர்கள் கையாண்ட நீர்முகாமைத்துவம்
நாம் எமது அனைத்து நீர்த் தேவைகளுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்கின்றோம். இதனை நன்கு புரிந்துகொண்ட எமது மூதாதையர்கள் அதனை மிகச்சரியான முறையில் முகாமைத்துவம் செய்திருக்கிறார்கள். நீரை நிலத்தடியில் சேமித்தல் (Recharging) நிலத்தடி நீரை உச்சபயனுள்ளதாக பயன்படுத்தல் (Discharging) மற்றும் மாசடையாது பார்த்துக்கொள்ளல் (pollution control). ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் உட்பட நீர்நிலைகளை உருவாக்கினார்கள் .மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி வரம்பு கட்டியும் வெறும் காணிகள் நிலங்களை உழுது விட்டும் நிலத்தடியில் நீர் சேமிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். வீட்டில் அல்லது தமது காணியில் கிடைக்கின்ற மேலதிக மழைநீர் குளத்தைச் சென்றடைவதற்கு ஏற்றது போல் வெளிகளே தங்கள் காணிகளைச் சுற்றி ஏற்படுத்தியிருந்தார் .நீரை தமது தேவைக்குப் பயன்படுத்தும் போதும் பெரியகிணறு அமைத்து அதில் நீர் ஊறிவர ஊறிவர விட்டே இறைத்தார்கள் அத்துடன் தமது விவசாயத்திற்கு அதிகாலையில் சென்றே இறைத்தார்கள். சூரியன் வரும் முன்னே அந்த தாவரம் நீரை பயன்படுத்துகின்ற ஏற்ப்பாட்டை செய்தார்கள்.
யாழ் ப் பாணத்தில் பெறக் கூடிய நீரின் அளவும் யாழ்ப்பாணத்திற்குத் தேவையான நீரின் அளவும் (water availability & Water Requirement)
யாழ்மாவட்டத்திற்கு சராசரியாக 1250 மில்லிமீற்றர் (mm) மழைவீழ்ச்சி கிடைக்கிறது. யாழ்ப்பாணத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட 1000 சதுர கிலோமீற்றர் (Sqr Km) எனவே 1250 மில்லியன் கன மீற்றர் (MCM) நீர் கிடைக்கிறது. 1250MCM நீர்மழை மூலம் ஒவ்வொரு வருடமும் கிடைக்கிறது. இதில் 375MCM நீர் (30%) கடலிற்கு செல்கிறது. 625MCM (50%) நீர் வெப்பத்தினால் ஆவியாகிறது. மீதியான 250MCM(20%) நீர் நிலத்திற்கு சென்று நிலத்தடி நீராக சேமிக்கப்படுகின்றது. 150MCM நீர் விவசாய தேவைக்கு எடுக்கப்படுகிறது. மீதியே (100MCM) நீர் பெறக்கூடியதாக இருக்கிறது. எமது குடிநீருக்கான தேவை 23MCM ஆகும். எமது தேவையை விட அதிகமாக நீர் இருக்கிறது என்பது எமக்கு ஒரு ஆறுதல் தரக்கூடிய விடயமே.
-: 22 :
அத்தோடு விவசாயத்தில் ஆட்டெரு, மாட்டெரு, கூட்டெரு என்பவற்றையே உரமாக பயன்படுத்தி நிலத்தடி நீர் மாசடையாமல் பார்த்துக்கொண்டார்கள். தமது வாழ்வியலையே நல்லதொரு நீர் முகாமைத்துவமாகக் கொண்டிந்தார்கள். குளம் அமைத்து அதனைச் சுற்றி மரங்கள் நட்டார்கள் அவைகள் நீர் ஆவியாகுவதை தடுப்பனவாகவும் நீரை சுத்திகரித்து நிலத்தடியில் சேமிக்க உதவிபுரிவனவாகவும் இருந்தன. கடவுள் மேல் கொண்ட பக்தி பயம் காரணமாக நீரை யாரும் மாசுபடுத்தமாட்டார்கள் என்பதால் ,
-: 23:
2.
மரத்துக்கும் அடியில் பிள்ளையாரையோ, முருகனையோ, அம்மனையோ ஏதாவது ஒரு தெய்வத்தை பிரதிஷ்ரை செய்து வணங்கி வந்தார்கள். கோயிலுக்கு அருகில் கிணறு அமைத்து அதிலேயே தமது குடிநீர்த் தேவைக்குரிய நீரைப் பெற்று வந்தார்கள். அத்தோடு பெரும்பாலான கோயில் திருவிழாக்கள் ஆனிமாதம், ஆடிமாதம், ஆவணிமாதம் நடைபெறும் கடைசிநாள் திருவிழாவை தீர்த்தம் என்று சொல்வார்கள். இதன் உண்மையான பொருள் தூர்வாருதல் அதாவது குளத்திற்குள் இருக்கும் சேர்ச்கதிகள் எல்லாம் வெளியில் எடுத்து புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் மழை பெய்யும் போது அந்நீரை சேமித்து வைப்பதற்கும் நிலத்தடைக்கு இலகுவில் ஊடுருவுவதற்குரியற்பதே ஆகும். கோயில்களை விட கோயிற் குளங்கள் முக்கியமானவை என்பதை நன்கு உணர்ந்து செயற்பட்டார்கள்.
நம் முன்னோர்களின் குடியிருப்பானது பல ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட மழைநீரை சேமிக்கக் கூடிய வரம்புகள் அமைத்து நீரைச் சேமித்து நிலத்திற்கடியிலும் வாய்க்கால்கள் மூலம் மேலதிக நீரை குளங்களிலும் சேமித்து வைத்தார்கள். ஆனால் தற்பொழுது அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என குடும்பங்கள் விரிவடைந்து செல்வதனால் அவர்களுக்கான குடியிருப்பானது பாரிய அளவிலிருந்த காணிகள் சிறுசிறு துண்டுகளாக குறுகி வேலிகள் எல்லாம் தற்பொழுது சுவர்களினால் கட்டப்பட்டு மதிலில் துளையிட்டு மழைநீர் தேங்கி நிற்காது பலதிசைகளிலும் சென்று வீணாகி விடுகின்றது. மேலும் வீதிகள் யாவும் தற்பொழுது காபெற் இடப்பட்டு அகலமாக்கப்பட்டும் உயர்த்தப்பட்டும் உள்ளதினால் மழைநீர் வழிந்தோடி, குளங்களிலும் சேர்த்து வைக்கப்படுவது தடைப்படுகிறது.
தற்போதய நீர் முகாமைத்துவம்
தற்போதய நீர் முகாமைத்துவமானது நீரைப் பாதுகாப்பதில் அக்கறையற்ற தன்மையையே காட்டி நிற்கின்றது. 1. பண்டைய காலங்களில் நம் முன்னோர்களால் பேணிப்
பாதுகாக்கப் பட்ட நீர் நிலைகள், குளங்கள் மற்றும் கிணறுகள் என்பன இயற்கையின் தாக்கத்தினால் துார்ந்து போயும் இன்றைய நவீன முன்னேற்றத்தினால் குளங்கள், கிணறுகள் மற்றும் நீர் நிலைகள் என் பன மூடப்பட்டு கட்டடங்களாகவும் வயல்களாகவும் விவசாய நிலங்களாகவும், பண்ணைகளாகவும் மாற்றப்பட்டுள்ளதினால் நிலத்தடிநீர் சேமிப்பானது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னைய காலங்களில் குளங்கள் அமைக்கப்பட்டு அத்துடன் குளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக குளங்களின் அருகே தெய்வத்தினையும் இருத்திவைத்தார்கள். காலப் போக்கில் கோயில்களின் விஸ்த்தீரணம் காரணமாக மண்டபங்கள், மடங்கள், கல்யாணமண்டபங்கள், அரங்கங்கள் என நவீன தேவைகள் ஏற்பட்டதன் காரணமாக கோயில்களுக்கு அருகிலிருந்த குளங்கள், நீர் நிலைகள் என்பன மூடப்பட்டு அவை தெரியாமலே போய்விட்டன.
-: 24 :
3. முன்னையகாலங்களில் நம் முன்னோர்களின் விவசாய
நடவடிக்கையானது சூரியன் உதிக்கு முன்னரே பயிர்களுக்கு நீர் பாய்ச்சினார்கள். இதனால் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீரானது முழுமையாக பயிர்களைச் சென்றடைந்தது. அத்துடன் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீரானது துலாமிதித்தும் பட்டை களாலும் வீண் விரயமில்லாது பாதுகாப்பாகவும் சிக்கன் மாகவும் பயன்படுத்தி விவசாயமும் நீரும் பாதுகாக்கப் பட்டது. ஆனால் தற்பொழுது அதிகாலையில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதைத் தவிர்த்து நினைத்த நேரத்திலும் நீர் பாய்ச்சுகின்றார்கள். இதனால் சூரிய வெப்பத்தின் காரணமாக பாய்ச்சப்படும் நீரானது முழுமையாக பயிர்களைச் சென்றடையாது ஆவியாகிவிடுகின்றது. மேலும் நவீன முறை மூலம் மின்சார இயந்திரங்கள்(Water purmp) போன்ற சாதனங் களினால் நீர் பாய்ச்சும் முறைகையாளப்படுவதனால் நீரைப் பெறுகின்ற கஷ்ட நிலை தெரியாது கட்டுப்பாடின்றி நீர்விரய மாக்கப்படுகிறது.
-:25 :
4.)
4.
விவசாயக் கிணறுகள் சேதமடைந்தும் பாதிப்படைந்தும் நிலமட்டத்துடன் இருப்பதனால் மழைத்தண்ணீர் நேரடியாக கிணறுகளில் உட்புகுந்து செல்லும் நிலமை காணப்படுவதுடன்
இதன் மூலம் அபாயகரமான பாதிப்பு ஏற்படுகின்றது.
நம் முன்னோர்கள் அன்றைய காலங்களில் பயிர்களுக்கு இயற்கைப் பசளையையே பயன்படுத்தினார்கள். இதனால் மண்வளம் பாதுகாக்கப்பட்டுமழைகாலங்களில் தேவையான நீரை நிலத்திற்கடியில் சேமித்து வைக்கக்கூடியதாக இருந்தது. பயிர்களும் செழிப்பாக வளர்ந்து நச்சுத்தன்மையற்ற அதன் விளைச்சலைத் தந்தது. மக்களும் நோயற்றவர்களாகவும் எந்நேரமும் சுறுசுறுப்புள்ளவர்களாகவும் சுகதேகிகளாகவும் நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும் காணப்பட்டார்கள். தற்போதய செயற்கை இரசாயன பசளையின் பாவனை காரணமாக மண்வளமும் பாதிக்கப்பட்டு முக்கியமாக செயற்கை இரசாயனப் பசளை காரணமாக அது மண்ணிற்கு அடியில் சென்று நன்னீருடன் கலந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி நீர்வளத்தையே பாதிப்பிற்குள்ளாக்கி விடுகின்றது.
5. மலக்கழிவுகளினால் பாதிப்படைதல்:
நகர்ப்பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் முறையற்ற கழிவகற்றல் முகாமைத்துவத்தினால் நேரடியாக நிலத்தினுள் உட்புகுந்து நீர் மாசடைகிறது.
G. - எண்ணெய்க் கழிவுகளினால் மாசுபடுதல்:
வாகனசுத்திகரிப்பு நிலையங்களில் முறையான கழிவுநீர் முகாமைத்துவம் இல்லாதமையினாலும் நிலத்தடி நீரினுள் உட்புகுந்து நீர் மாசடைகின்றது.
அளவு தொடர்பான பாதிப்புக்கள்
1.)
நீர் தொடர்பாக தற்போது நிலவுகின்ற பிரச்சனைகளும் சவால்களும்
நிலத்தடிநீர் தொடர்பாக தரம் தொடர்பான பாதிப்பும் அளவு தொடர்பான பாதிப்பும் தற்போது எதிர்கொள்கின்றனர். தரம் தொடர்பான பாதிப்புக்கள் - கடல் நீர் உட்புகுதல்:
நாட்டின் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாகவும் போதியளவு நிதி ஏற்பாடு இன்மை காரணமாகவும் உவர் தடுப்பணைகள் சரிவர பராமரிக்க முடியவில்லை . இதன் காரணமாக கடல் நீர் அதிகளவு உட்புகுந்து உவர்நீர் ஆக்கப்படுகின்றது.
நீருக்கான தேவை அதிகரித்தல்:
சனத்தொகைப் பெருக்கம் காரணமாகவும் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் பிரதேச அபிவிருத்தியாலும் நீருக்கான தேவை அதிகரித்துள்ளது. )
2. நிலத்துக்குள் ஊடுருவும் நீரின் அளவு குறைவடைதல்:
நகரமயமாக்கல் மற்றும் நீர் நிலைகளை சரியாக பராமரிக்காத காரணத்தினாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதனால் வீடுகள், சுற்றுப்புறச் சூழல் கொங்கிறீற்றால் தரை போடப்படுவதுடன் வீதிகள் காப்பெற்றினால் போடப்பட்டிருத்தல் நிலத்திற்குள் நீர் ஊடுருவி நிலத்தடியில் சேமிக்கப்படுவது குறைவடைந்துள்ளது
2. ஆழ்துளைக் கிணறுகள் அதிகளவில் அமைக்கப்படல்:
அதிகளவு தேவையின் பொருட்டு அதிக ஆழங்களுக்கு கிண று ளை அமைத்து நலத் தடி நீரை அதிகமாக அகத்துறுஞ்சப்படுவதனால் உவர் நீர் ஆக்கப்படுகின்றது.
3.
இரசாயனங்களினால் மாசுபடுதல்:
விவசாய நடவடிக்கையின் பொருட்டு அதிகமான செயற்கை இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதனால் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்படுகின்றது.
-: 26 :
3. அதிகமான நீரை எடுத்தலும் வீணாக்குதலும்:
| விவசாயத் தேவையின் நிமித்தம் கூடுதலான நீர் எடுக்கப்பட்டு சரியானமுறையில் முகாமைத்தும் செய்யப்படாமல் பயன்படுத்துவதால் பெருமளவு நீர் விரயமாக்கப்படுகின்றது. அதேபோல் வீடுகளிலும் விடுதிகளிலும் கணிசமான நீர் விரயமாக்கப்படுகின்றது.
-: 27:
மணல் அகழ்வு மற்றும் சுண்ணாம்புக்கல் பாறை அகழ்வு:
நிலத்தடி நீரில் மண் கும்பி மற்றும் சுண்ணாம்புக்கல் பாறையின் செல்வாக்கு மிகவும் பிரதானமானது. சட்டரீதியாகவும் சரி சட்டத்திற்கு அல்லாத மணல் அகழ்வு மற்றும் சுண்ணாம்புக்கல் பாறைஅகழ் வினால் நிலத்தடி நீரில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது.
மற்றும் பிரதேச சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தல். மேலும் கழிவுநீரை மீள்சுழற்சி செய்வதன் மூலமும் நீர் வெளியேற்றலைக் கட்டுப்படுத்த முடியும். வாகனசுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வெளிவரும் கழிவுநீரை மீளப் பயன் படுத்துவதற்கு ஏற்றதாக சுத்திகரிப்பு செய்வதற்கான நடைமுறை களை பின்பற்றல்.
நீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் 1. கடல்நீர் உட்புகுவதைத் தடுப்பதற்கு ஏற்ற உவர்நீர்த் தடுப்பணை களைப் புனரமைப்பதோடு, நீரேரித்திட்டங்களை புனரமைத்து அவற்றை திருப்திகரமான முறையில் பராமரித்து ஒழுங்குபடுத்தல் வேண்டும்.
7. குளங்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைப்புச் செய்வதன் மூலம் மழைநீரை அதிகளவில் சேமிக்க நடவடிக்கைகளை எடுத்தல். வீடுகள்,பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேமிப்பதற்கு புதிய உத்திகளைக் கையாளுதல். மழைநீர் தொட்டிகளை அமைத்து மழைநீரைச் சேமித்து அதனைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
2. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தலைக் கட்டுப்படுத்தல்.
3. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களைக் கட்டுப்படுத்தி, இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுதொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தல். நிலத்தடி நீர் மாசுபடுதலைக் கட்டுப் படுத்தும் சேதன விவசாயத்தினை ஊக்குவித்தல்.
8. நீர் விரயமாகுதலைக் கட்டுப்படுத்தல். விவசாயத்தில் நீரைச் சிக்கனமாக பயன் படுத்தும் முறைகளான துரவல் நீர்ப்பாசனம் மற்றும் சொட்டுநீர்ப்பாசனம் போன்றவற்றை அறிமுகப்படுத்தல். மேலும் விடுதிகளில் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் நீர் வழங்கும் உபகரணங்களைப் பயன்படுத்தல். )
4. விவசாயக் கிணறுகளை தகுந்த முறையில் புனரமைப்புச் செய்து, அவற்றை விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.
9. வளங்களைப் பாதுகாத்தல். மணல் மற்றும் சுன்னாம்புக் கற்கள் போன்ற நிலத்தடி நீரில் செல்வாக்குச் செலுத்தும் வளங்களைப் பாதுகாத்து, மணல் மேடுகள் காணப்படும் இடங்களில் அபிவிருத்தி மற்றும் விவசாய பணிகளைக் கட்டுப்படுத்தல்.
10. நீரைப் பாதுகாப்பது தொடர்பான சட்டங்களை உருவாக்குதல்.
5. சனநெருக்கடி மிகுந்த நகரங்களில் மலக்கழிவுகள் நிலத்தடி நீருக்குள் கலக்காதபடி சரியான கழிவகற்றல் முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்தல்.
6. தொழிற்சாலைகள் மற்றும் வாகனசுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சூழல்சட்டங்கள் மற்றும் கழிவகற்றும் திட்டங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை
-: 28 :
யாழ்ப்பாண நீர்ப்பிரச்சனைக்கான உபாயமான மிகப்பெரும் திட்டங்கள்
- யாழ்ப்பாண குடிநீர்த்தேவைக்கு இரணைமடுவில் இருந்து நீரை கொண்டுவருதல் என்ற முனைப்புடன் திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தபோதிலும் அங்கே உள்ள நீர் அங்குள்ள விவசாயத்தேவைக்கே போதுமானதாக இல்லாததால் கிளிநொச்சி
-: 29 :
விவசாயிகள் யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்குவதை விரும்பவில்லை. இதன் விளைவாக நீரைபெறு வதற்கான பல தேடல்கள் தொடங்கின அதன் பெறுபேறுகளாக பின்வரும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
4. கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்
மருதங்கேணி தாழையடியில் கடற்பரப்பில் நீரை எடுத்து அதனை சுத்திகரித்து நன்னீராக மாற்றி குடிதண்ணீருக்கு வழங்குதல்
வடமராச்சி நீரேரித்திட்டம்
வடமராட்சி நீரேரியில் கிடைக்கின்ற நீரின் ஒரு பகுதியை உப்பாறு நீரேரியில் அந்தணதிடல் எனும் பகுதியில் 6 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் 25 அடி உயரத்திற்கு அணைக்கட்டு அமைத்து அதற்குள் நீரைச் சேமித்து மாதாந்தம் 1.5 MCM நீரை குடிநீருக்கு வழங்குவதே இத்திட்டமாகும். பேராசிரியர் குகனேஸ் வரராஜா அவர்களின் சிந்தனையிலும் அவரது ஆய்விலும் கண்டறியப்பட்ட திட்டம் இதுவாகும்.
நிலத்தடி நீரை சேமிப்பதற்குரிய நவீன முறைகள் 1) பண்ணை குளங்கள் அமைத்தல்- farmponds (Thuravu) தோட்டக்காணிகளில் 3 பங்கில் நீரை சேமிப்பதற்காக தாழ்வாக உள்ள பகுதியை வெட்டி அந்த மண்ணை மிகுதியாக உள்ள 3 பங்கில் இட்டு நிரவி மேட்டுக் காணியாக்கி இறுதியாக உள்ள பகுதியில் விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். அதனால் நீரை சேமிப்பதற்கும் விவசாயம் இடம்பெறவும் சிறந்த வழிவகையாக காணப்படுகிறது. இது தற்போது சில நாடுகளில் நடைமுறையில் காணப்படுகிறது.
Improvements of Farm ponds (Thuravu)
யாழ்ப்பாணத்திற்கான ஆறு /மேம்படுத்தப்பட்ட ஆறுமுகம் திட்டம்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியிலாயராக இருந்த ஆறுமுகம் என்பவரால் முன்மொழியப்பட்டு 1950 களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடையில் கைவிடப்பட்ட திட்டம். தற்போது நெதர்லாந்து நாட்டின் நீர் தொடர்பான நிபுணர்களால் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சாத்தியப்பாடுகள் ஆராயப்பட்டு ஒரு மேம்படுத்தப்பட்ட யாழ்பாணத்திற்கான ஆறு திட்டம் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 30000 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் மேம்படுத்தப்படுவதோடு மாதாந்தம் 1 MCM குடிநீருக்குரிய நீர் வழங்கும் ஏற்பாடும் காணப்படுகின்றது.
::
:
-
.
Through inpromene.
Ground water will be improved and
Fresh water will be available for agriculture
2)
ம்
3. பாலிஆற்றுத்திட்டம்
மன்னாரில் மிக கணிசமான நீர் பாலி ஆற்றின் ஊடாக கடலை சென்றடைகிறது இந்த ஆற்றிற்கு குறுக்கே அணைகட்டி மிகப்பெரிய குளத்தை அமைப்பதன் மூலம் மன்னார், வவுனியா யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதுடன் விவசாய நடவடிக்கைக்கும் நீரை பயன்படுத்த முடியும்.
-:30 :
தண்ணீ ரை உட்செலுத்தும் அமைப்பு (Infiltration well or Recharging well)
காணிகளில் தாழ்ந்த இடத்தில் கிடங்கு ஒன்றை வெட்டி அதனுள் பெரிய சல்லி (40mm சல்லி) கல்லை அரைவாசிக்கு நிரப்பி அதற்கு மேல் சிறு சல்லி கற்களை (கிரவல்) இட்டு அதற்கு மேல் பெரிய மணலை போடுதல் வேண்டும். பின்னர் அதனை மூடி போட்டு மூடி நீர் செல்வதற்கு மட்டும் ஒர் வழி விடுதல் வேண்டும். இதனால் நீரானது வடிகட்டி நிலத்தடியில் சேமிக்கப்படும்.
-: 31:
Infiltration wells (Recharge well)
1) வீதியோரங்களில் தேங்கும் நீரை சேமித்தல் :
மழை காலத்தில் வீதியோரங்களில் தேங்கும் நீரையும் நாம் சரியான பொறிமுறையை பயன்படுத்தி நிலத்தடியில் சேமிக்க முடியும்.
தம் 28
ஆர் - 1
2) மீள்நிரப்பும் நடைமுறை: நிலங்களில் பாரிய கிடங்கு போல வட்ட வடிவாக வெட்டி அதனுள் வடிகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்து மழை நீரை சேமிப்பதன் மூலம் நீரை மீள்நிரப்புகை செய்யலாம்.
பாரி சதா 1 IMT பக்தி
-
1
)
புரம்
அகம் கதைகளை
-----
---
..
share on
:
... ,
5 அத்
..
-
?
.
.
-
-
-
-
3. வீட்டின் கூரையிலிருந்து வடியும் மழைநீரை கிணற்றிற்குள்
செலுத்துதல் :
கூரையிலிருந்து வடியும் மழை நீரை மழை நீர் வழிந்தோடும் பீலி (Cutter) இற்கு ஊடாக செலுத்தல். இதற்காக வீட்டில் கிணற்றின் அருகிலுள்ள தொட்டியில் சிறு கற்களைப் போட்டு அதற்கு மேல் மணலை இட்டு வடிகட்டுவதற்குரிய ஏற்பாடு (Filter Arrangement) செய்தல். கூரையிலிருந்து வடியும் மழை நீரை இணைத்து (Connect) செய்து வடிகட்டி (Filter) இற்கு ஊடாக கிணற்றினுள் செலுத்தல். குழாய் கிணறிற்கும் (Tube Well) இதே மாதிரியான ஒர் முறையை பின்பற்றி நீரை உட்செலுத்தலாம். மழை நீரில் நச்சு வாயுக்கள் ஏதாவது கலந்திருக்கும் என்ற சந்தேகம் ஏற்படின் வடிகட்டி (Filter) இல் சிரட்டைக் கரியை ஒரு படை (Layer) ஆக போடலாம். சிரட்டைக் கரியானது எந்த விதமான நச்சுக்களையும் உறிஞ்சக்கூடியது.
Recharging Through Dug wells
அதனை நாம் பாடசாலைகளிலும் மேற்கொள்ளலாம்.
நீர் முகாமைத்துவம் தொடர்பாக வீடுகளில் கடைப் பிடிக்க வேண்டியவை: 1) - நீர் நிலத்தடிக்கு ஊடுருவ கூடிய வகையில் கல்பதித்தல்
(Water Permeable Paving)
PERMEABLE PAVING
-
-
-
15
:
:
EL REIGING FROM இப் பிரிவு 444 417கப்
-
--
- -
-
7"
:
(்ரா சவு, நகர் நகர்,
Recharge Through Abandoned Dug Woll
-: 32 :
-: 33:
1) 2)
Rain Water Harvesting-மழைநீர் சேகரித்தல் Infiltration Wel1 - வடிகட்டும்கிணறு Reduce Water Wastage - வீண் விரயத்தை தடுத்தல்
3)
விவசாயத்தில் நீரை மீள்நிரப்புகை: 1) பண்ணை குளங்கள் அமைத்தல் (Farm Ponds) 2) சொட்டு மற்றும் தூவல் நீர்ப்பாசனம் மேற்கொள்ளல் சேதனப் பயிர்ச்செய்கை (Organic Farming)
Recharge & water saving in farmers level
Jal
-
-
-
Drip & Sprinkler Irrigation Reduce Agro chemical Otcanic farming
நீர் தொடர்பான விழிப்புணர்வு
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நீர் பற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்தப்படுவது இன்றியமையாததாகும். அந்த வகையில் நாம் பாடசாலை மட்டத்திலும் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கும் நீர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியமாகும்.
நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்ய வேண்டும் என்ற கூற்றுக்கிணங்க நாம் எவ்வளவு நீரை சேமிக்கிறோமோ அதையே மீள பெற்றுக்கொள்ள முடியும் நீ எதை எல்லாம் விதைக்கிறாயோ அதையெல்லாம்அறுவடை செய்யவேண்டும் என்ற கூற்றுக்கிணங்க நாம் நீரை எவ்வாறு மாசுபடுத்தாது பேணி பாதுகாக்கிறோமோ அதற்கேற்றவாறே நாமும் எமது சந்ததியும் நலநீரைப்பெற்றுக்கொள்ள முடியும்.
-:34 :

Comments

Popular posts from this blog

கணனி பயில்வோம் 02

பார்வை திரும்புமா