Posts

Showing posts from September, 2019

நிலத்தடி நீர் காப்போம்

நீர் முகாமைத்துவம் தொடர்பாக 11.09.2019 அன்று வாழ்வகத்தில் நடைபெற்ற நினைவுப் பேருரையின் போது வடமாகாண நீர்பாசன பொறியியலாளர் எந்திரி. சர்வானந்தன் சர்வராஜா ஆற்றிய உரை அனைத்து மக்களின் பயன்கருதி இணையத்தில் பிரசுரிக்கிறேன்.   நீர் பற்றிய அறிமுகம் நீரின்றி அமையாது இவ்வுலகு ( When Water Fails , Function of Nature Cease ) நீர் என்ற ஒன்று பொய்த்துப் போகுமானால் ) இந்த இயற்கையின் அத்தனை அசைவுகளும் நின்றுவிடும் , உறைந்துவிடும் என்பதை 3000 ஆண்டுகளுக்கு முன்னே எங்கள் ஐயன் வள்ளுவன் எடுத்தியம்பி விட்டு சென்றிருக்கிறான் . நீர் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதையும் அது பற்றிய விழிப்புணர்வு எம்மிடம் என்றும் இருக்கவேண்டுமென்று என்றோ எமக்கெல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறது . “ மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் முதல் காரணி நீர் ” யே மூன்றாம் உலகப்போர் மூளுமாகயிருந்தால் அதற்கான முக்கியமான முதன்மைக் காரணம் நீராகத்தான் இருக்குமென்று இன்றைய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் உலக அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றார்கள் . மழை பெய்யும் தானே எமக்கு நீர் கிடைக்கும்தானே என்று எதிர்பார்த்து