கணனி பயில்வோம் 02


11.08.2019
01.NVDA
இம் மென்பொருள் NV access என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.  .   இதனைஅல்லாது எல்லோராலும் இணையத்தளத்திலிருந்து இலவசமாக  பதிவு இறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியதாக உள்ளதால் உளகளாவிய ரீதியில் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் இம்மென்பொருளில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளதால் இணையத்தளங்களில் தமிழில் வெளியாகும் செய்திகளை வாசித்து அறியக்குடியதாக இருப்பது இம்மென்பொருளின் விசேட தன்மையாகும்.
குறிப்பு -கணனியில் NHM Writer மற்றும் அந்தகக்கவி   போன்ற மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் Ms word இல் தமிழில் தட்டச்சு செய்பவற்றை Nvda உதவியுடன் வாசித்து நாமே திருத்தங்களை மேற்கொள்ளமுடியும்.
 மேலும் nhm converter என்னும் மென்பொருளை கணனியில் நிறுவுவதன் மூலம் Unicode அல்லாத எழுத்து வடிவத்தினை Unicode வடிவத்திற்கோ    அல்லது Unicode வடிவத்திலிருந்து  Unicode அல்லாத எழுத்து வடிவத்திற்கோ மாற்ற முடியும்.

02.Out spoken 9.0 for Macintosh –
Windows இயங்குதளம்தவிர்ந்த Macintosh இயங்குதளம் உடைய கணனிகளுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்அகராதிமற்றும்வரைவுகளுக்கானஉச்சரிப்புக்கள்என்பனவும்மவுஸ்அழுத்தல்அசைவு (drag and drop) செயற்பாடுகளையும்இதுமிகத்தெளிவாகஎடுத்துக்கூறும்.

03.Virgo4
இவ்மென்பொருட்கள் Windows இயங்கு தளத்திற்கு  ஏற்ற வகையில் உருவாக்கப்பப்ட்டுள்ளது. இம்மென்பொருட்கள் பார்வை சிறிது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது  தெரியப்படுத்தும் பகுதிகள் மிகவும் உருப்பெரிதாக காட்டும். எனவே அப்பகுதியை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். இதில் எந்தவித ஒலி சமிக்ஞை அமைப்பும் அற்றதாக காணப்படுகின்றது.

04. Microsoft Narrator
ம் மென்பொருட்கள் Windows இயங்குதளத்தில்  ஒரு இணைப்பாகவே உள்ளது.ஆரம்பத்தில்  இலகுவில் புரிந்துகொள்ளும் தன்மை  அற்றதாக காணப்பட்ட போதிலும் தற்போது windows 10 இயங்கு தளத்தில் காணப்படுகின்ற Narrator மிகவும் தெளிவான குரல் அமைப்பை உடையதாகவும் வள்ளுவர்   tamil ttx  உடன் இணைந்து செயற்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. Windows 7 இயங்கு தளமுடைய கணனியில் இதனை செயற்படுத்த windows + u பின்னர் alt + n விசைகளை அழுத்த வேண்டும். Windows 10 இயங்குதளத்தில் இதனை செயற்படுத்த control, windows + enter விசைகளை அழுத்த வேண்டும்.

05. BRLTTY
 இம்மென்பொருள் BRLTTY  குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை *nix, Windows console, DOS, Android ஆகிய இயங்குதளங்களில் நிறுவிப்பயன்படுத்தமுடியும். இது இலவச மென்பொருளாகும்.

06. ChromeVox
இம்மென்பொருள் Google நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இதனை Chrome OS or, with a speech processor, Linux, Mac, Windows ஆகிய இயங்கு தளங்களில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்த முடியும்.

07. COBRA
இம்மென்பொருளை BAUM Retec என்பவர் வடிவமைத்துள்ளார். Windows இயங்கு தளத்தில் நிறுவிப் பயன்படுத்தக்கூடிய இந்த திரை வாசிப்பான் ஒரு வர்த்தக ரீதியிலான மென்பொருள் ஆகும்.

08. Lingspeak
 இம் மென்பொருளானது Lingit என்பரால் உருவாக்கப்பட்டதாகும். இதனை Windows இயங்குதளத்தில் நிறுவிப்பயன்படுத்த முடியும். ஆயினும் இது ஒரு வர்த்தக ரீதியிலான மென்பொருளாகும்.

09. SUSE-Blinux
இம் மென்பொருள் Novell என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதனை Linux இயங்குதளத்தில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்த முடியும்.

10. Emacspeak
 இம் மென்பொருளை  T. V. Raman என்பவர் வடிவமைத்துள்ளார். இதனை Emacs (on *nix என்ற இயங்கு தளத்தில் இலவசமாக நிறுவிப்பயன்படுத்த முடியும்.
11. VoiceOver  
இத் திரைவாசிப்பான் Apple Inc நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது Mac இயங்கு தளத்தில் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது.

12. Thunder 
இந்த திரை வாசிப்பான் Sensory Software என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை windows இயங்கு தளத்தில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்த முடியும்.

13.Supernova
இம் மென்பொருள் Dolphin Computer Access என்னும் நிறுவனத்தினால் windows  இயங்கு தளத்திற்காக உருவாக்கப்பட்டதாகும் இது வர்த்தக ரீதியிலான மென்பொருளாகும்.

14. HAL
இவை பொதுவாக எல்லா வகையான Windows இற்கும் எற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹல் மென்பொருட்கள் தனித்து எழுத்துக்களை மாத்திரமின்றி Windows dialogs ,icons,buttons, menus என்பவற்றை மிகவும் தெளிவாக தெரியப்படுத்தும்.
15.  JAWS
 இது Freedom Scientific என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது வர்த்தக ரீதியிலான மென்பொருள் என்பதால் வசதி படைத்தோரே இதனை பயன்படுத்துகிறார்கள். இது பொதுவானதும், அதிதிறன் மிக்க பிரத்தியேகமானதும்எனஇருவகைப்படும். அத்துடன் பயிற்சிக் கையேடும் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் கல்வி சம்மந்தமானதும் தொழில் சார்ந்ததுமான தகவல்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது.

 நன்றி
நட்புடன் சி. பிரதீபன்

Comments

Popular posts from this blog

நிலத்தடி நீர் காப்போம்

பார்வை திரும்புமா