கணனி பயில்வோம்




அன்பானஉள்ளங்களே !
இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது.  அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த தொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு,  விழிப்புலன் உடைய ஒருவரின் உதவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் நாமாகவே கணனியில் நிறுவிக்கொள்ள முடியும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
நன்றி
தொகுப்பு.
ஆசிரியர்
சி.பிரதீபன்


விழிப்புலன் மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் தகவல்தொழிநுட்பத்தின் பங்கு
அறிமுகம்
            உலகில் வாழும் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு   தொழில்நுட்பம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்று வளர்ச்சியடைந்து வருகின்றது.          அதில் பிரதான இடத்தை வகிக்கின்ற கணனியும் அதனை சார்ந்த இலத்திரணியல் சாதனங்களும் விழிப்புலன் மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள  மாற்றங்களைஇங்கு பார்ப்போம்.
கணனி என்பது குறித்த கட்டளையின் படி செயற்படத்தக்கதும் தரவுகளை கட்டளைகளாக மாற்றக்கூடியதும் சேமிப்புத் திறன் உடையதும் பின்னர் அவற்றை மீள வழங்கக்கூடியதுமான ஓர் இலத்திரணியல் சாதனமே கணனி ஆகும்.இது வன்பொருள், மென்பொருள், உயிர்ப்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு எனவும் கூறலாம்.
            கணனியையும் அதன் பாவணையாளரையும் (user) இணைக்கும் ஒரு ஊடகமாகவே மென்பொருட்கள் (software)  தேவைப்பட்டன. இவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க புதிய பல மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைவருடைய பாவனைக்கும் உகந்ததாகவும் இலகுவான முறையில் கையாளத் தக்கதாகவும் வெளிவந்துள்ளன. அனைவரும் பாவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உருவாக்கப்படும் மென்பொருட்களில் சில, விழிப்புலன் மாற்றாற்றல்   உடையோருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்டவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
01.   திரைப் படிப்பான்(Screen Readers)
02.  ஸ்கான் செய்து வாசிப்பது (Scanning and Reading Software)
03.  இணையத் தேடல் பகுதியை வாசிப்பது (Internet Browser Readers)
04.   பல வகைப்பட்ட மென்பொருட்கள் (Miscellaneoussoftware’s)
அடுத்து நாம் மேற்குறிப்பிட்ட வகைகள் தொடர்பாக விரிவாக ஆராய்வோம்
 திரைப்படிப்பான் (Screen Reader)
            இம் மென்பொருள் கணனியை பாவிக்கும் போது அதன் ஒவ்வொரு விசையினதும் செயற்பாட்டுக்கு ஏற்ப ஒலியின் உதவியுடன் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும். அதாவது திரையில் தோன்றுபவற்றை ஒலி வடிவில் எமக்கு அறியத் தருகின்றன. தற்போது  திரைப்படிப்பானாக  பின்வரும் மென்பொருள்கள் உலகலாவிய விழிப்புல மாற்றாற்றல் உடையவர்களால் கணனியில் நிறுவப்பட்டு  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Windows eye, Hal, Jaws, Nvda, System Access (Windows), Apple VoiceOver போன்றவை அவற்றுல் சிலவாகும்.

தொடரும்

Comments

Popular posts from this blog

நிலத்தடி நீர் காப்போம்

கணனி பயில்வோம் 02

பார்வை திரும்புமா